loader image

Author:

Reviews

There are no reviews yet.

Be the first to review “தங்க கப்பல்”

Your email address will not be published. Required fields are marked *

தங்க கப்பல்

500 ஆண்டுகளுக்குப் பிறகு பாலைவன மணலில் கண்டுபிடிக்கப்பட்ட ‘தங்கக் கப்பல்’… போர்ச்சுகீசிய புதையல் வெளிவந்தது.

ஏதோ ஹாலிவுட் சயின்ஸ் பிக்‌ஷன் படம்போலத் தோன்றுகிறதா? ஆனால், இது நிஜமாகவே ஆப்பிரிக்காவின் நமீப் (Namib) பாலைவனத்தில் நடந்துள்ளது.

#அட்லாண்டிக் கடற்கரையோரம் பரந்து விரிந்து கிடக்கும் இந்த #மணல் பரப்பிற்கு அடியில், 500 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த ‘தங்கக் கப்பல்’ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு, நமீபியாவின் கடற்கரை ஓரம் வைரச் சுரங்கப் பணிகளுக்காகக் கடல் நீரை வெளியேற்றித் தரையைத் தோண்டியபோது, ஆராய்ச்சியாளர்கள் திகைத்துப்போனார்கள். அங்கே ஒரு பழைய மரக்கப்பலின் சிதைவுகள் தெரிந்தன. ஆய்வில் அது 1533-ம் ஆண்டு மாயமான ‘பாம் ஜீசஸ்’ (Bom Jesus) என்ற போர்ச்சுகீசிய வணிகக் கப்பல் என்பது உறுதியானது.

கப்பலுக்குள் என்ன இருந்தது?

கப்பலின் மரப்பலகைகளை மெதுவாக விலக்கியபோது, கண்ணைப் பறிக்கும் பொக்கிஷங்கள் கொட்டிக்கிடந்தன. 2,000 தங்க நாணயங்கள் இத்தனை நூற்றாண்டுகள் கழிந்தும் அதன் பிரகாசம் குறையாமல் அப்படியே இருந்தன. டன் கணக்கிலான செப்புக் கட்டிகளும், ஏராளமான வெள்ளி நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. ஆசியாவிற்கு வணிகம் செய்யச் சென்றபோது சேகரிக்கப்பட்ட அரிய வகை யானைத் தந்தங்களும் மிகச் சரியான நிலையில் இருந்தன.