கவிதைக்களம்
இதயத்தின் மொழியை எழுத்தோவியமாய் வடித்தே, மனதாழத்தின் பொக்கிஷங்களை வார்த்தைகலால் தொகுக்கும் அழகிய வரம் “கவிதைக் களம்”
அகரமுதலி தமிழ் கவிதைக் களம்
அகரமுதுலி வலைத்தளத்தின் பற்றாளர்களாகிய எமது வாசகர்களே!, உங்கள் வாழ்வின் சாரலிலே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் கவிதைகள் வெறும் வார்த்தைகள் அல்ல, வெறும் எழுத்துக்கள் அல்ல, அவை இதயத்தின் உள்ளார்ந்த உணர்வுகளின் ஆழமான மொழிகள். அத்தகைய உணர்வுப்பூர்வமான படைப்புகளுக்கான ஒரு அங்கீகாரமாக உங்கள் உணர்வுகளின் வானத்தில் சுதந்திரமாகப் பறக்கக் களம் அமைத்துத் தருகிறது ”கவிதைக்களம்”.
துன்பத்தின் சுமையும், மகிழ்ச்சியின் மன்றாட்டமும், கண்ணீரின் கலக்கமும், புன்னகையின் புன்முருவலும், கற்பனைச் சிதறல்களில் உங்கள் பார்வையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர ஒரு உணர்வுப்பூர்வமான தூது “கவிதைக்களம்”.
உங்கள் எண்ணத்தில் தோன்றும் உணர்வுகளைத் தனித்துவமான படைப்புகளுக்குக் களமாக வாசகர்களின் தமிழ் மீதான காதலுக்குப் பாலமாக அமைய வார்த்தைகளின் அற்புத உலகில் மூழ்கலாம் வாருங்கள் இப்படிக்கு “கவிதைக்களம்”








