(04.12.2025) இந்தநாள் வரலாற்றில் சிறப்புமிக்க நாள்.. இந்தியாவில் காலம் காலமாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான ஒரு நிகழ்விலிருந்து, பெண்களை காப்பாற்றிய நாள்..
அந்த கொடூரமான நிகழ்வைப்பற்றி “டொனால்ட் கேம்ப் பெல்,(Donald Campbell) என்ற ஐரோப்பியர் 1798ம் ஆண்டு தனது குறிப்பில் பதிவு செய்துவைத்துள்ளார்..
“கணவன் இறந்தால் அவர் மனைவி கணவனோடு சேர்ந்து உடன்கட்டை ஏற்றல் நேரில் பார்த்து, அவர் குறிப்பிட்டுள்ளார்.. அங்கு நடந்த நிகழ்வுகளைப்பற்றிய.. அவரின் குறிப்பு…
“உடன்கட்டை ஏற்றும் நிகழ்வை பார்க்க நான் சென்றிருந்தேன்.. இந்த வேதனை தரும் கொடிய சம்பவம் நிகழ்ந்த இடம், தஞ்சாவூர் கோட்டையில் இருந்து ஒரு மையில்தூரம் வடக்கே உள்ள காவிரி ஆற்றின்கரை..
அந்த அப்பாவி பெண்ணிற்கு 16 வயதுதான் இருக்கும், வெள்ளை சேலை கட்டி இருந்தாள், தலையிலும் கழுத்தை சுற்றிலும், வெள்ளை நிற மல்லிகை பூ சூடி இருந்தால், அந்தப்பெண்ணைச்சுற்றி 20 பெண்கள் நின்று கொண்டு ஒருவெள்ளை துணியை அவள் தலைக்கு மேல் வெயில் படாமல் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். அங்கிருந்து ஒரு 20 அடி தள்ளி சிலர், விறகு கட்டைகளால் எட்டடி நீளத்திலும், நான்கடி அகலத்திலும், விறகுகட்டைகளால் சிதை தயாரித்து கொண்டு இருந்தார்கள்.
முதலில் மூன்றடி உயரத்திற்கு கம்புகளை செங்குத்தாக நிறுத்தினார்கள்.
உள்ளே சிறிய சிறிய மரத்துண்டுகளால் நிரப்பினார்கள். அருகில் வைக்கப்பட்டிருக்கும், இறந்தவருக்கு 60 வயதிற்கு மேல் இருக்கும்.. இறந்தவரின் உடலுக்கு சில பிராமணர்கள் சடங்குகள் செய்து கொண்டிருந்தார்கள். சில மந்திரங்களையும் ஓதிக் கொண்டிருந்தார்கள்.
மற்றவர்கள் மந்திரம் சொல்லிக்கொண்டு கையில் இருந்த பச்சை இலையால் தண்ணீரை எடுத்து அருகில் குவித்து வைத்து இருந்த சாண எருக்களின் மீது தெளித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு வயதானவர் ஓலைச்சுவடியை பார்த்து ஏதோ வாசித்துக் கொண்டும் இருந்தார். என்னைப்போல் இந்த சம்பவத்தை நேரில் பார்க்க பலர் நின்று கொண்டிருந்தார்கள்.. நான் அருகில் இருந்தவரிடம் கேட்டேன் “சடங்கு இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் “என்று. அதற்கு அவரோ “இன்னும் சிறிது நேரத்தில் முடிந்துவிடும்” என்றார்.
அந்த 16 வயது இளம்பெண்ணை மற்ற பெண்கள் ஆற்றில் குளிக்கவைக்க அழைத்துச் சென்றார்கள்.. பிறகு அந்தப்பெண்ணை அலங்காரம் செய்தார்கள்.. அந்தப்பெண்ணும் எந்த உணர்வுகளும் இல்லாமல் பித்து பிடித்தவர்போல் தோற்றமளித்தார்..
பின் மெதுவாக அந்த பெண் சிதைக்கு அழைத்து வரப்பட்டார். சிதையில் ஏற்கனவே அந்தப் பெண்ணின், 60வயது கணவனின் உடல் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.. பின் மெதுவாக அந்த சிதையை மூன்று முறை சுற்றிவந்தார்.. பின் யாருடைய உதவியும் இன்றி தானாகஏறி தன் கணவனிடத்தில் அமர்ந்து கொண்டால் அந்த
அப்பாவி பெண்..
பின் தான் அணிந்திருந்த ஆபரணங்களை ஒவ்வொன்றாக கழட்டி அருகில் உள்ள
பெண்களிடம் கொடுத்தார்.. பிறகு அனைவரையும் ஒருமுறை சுற்றியும் பார்த்துவிட்டு மெதுவாக தன் கணவன் அருகில் படுத்தார் அந்தப்பெண்.. பிறகு ஒருமஞ்சள் துணியால் அந்த பெண்ணின் முகம் மூடப்பட்டது.. பின் தன் கணவரோடு நெருக்கமாக படுத்து தனது வலது கையை தூக்கி அவர் மார்பின் மீது வைத்தாள்
அந்த இளம்பெண்.. பிறகு அந்தப் பெண்ணிடம் எந்த அசைவும் இல்லை.. சுற்றி இருந்தவர்கள் அந்த பிணத்தின் வாயில் அரிசியையும், அந்த பெண்ணின் மீது அரிசியையும் தூவினார்கள்..
பிறகு சிறிது நீரை இருவர் மீதும் தெளித்தார்கள்.. பிறகு, கயிறு கொண்டு இருவரையும் சேர்த்து கட்டினார்கள். பின் இருவர் உடலும் மற்றவர் கண்களில் மறையும் அளவுக்கு மரக்கட்டைகளை கொண்டு சுற்றி அடுக்கினார்கள். கட்டைகளை அடுக்கும் பொழுது எண்ணெய் போன்ற திரவத்தை அவ்வப்போது ஊற்றினார்கள்.. இப்பொழுது வெறும் விறகு குவியியலாக மட்டும் என் கண்களுக்கு தெரிந்தது..
ஒரு பிராமணர் சிதைக்கு அருகே அந்தப்பெண்ணின் தலை அருகே வந்து ஏதோ முணுமுணுத்து சொன்னார்.. பின் எல்லோரையும் பார்த்து சிரித்தார். பிறகு முழுவதுமாக வைக்கோலால் மூடினார்கள், சுற்றிலும் கயிற்றால் இறுக்கிக்கட்டினார்கள்..
பிறகு ஒருவர் அந்த சிதைக்கு தீ மூட்டினார்.. தீ மல மலவென பரவுவதற்காக பலர் விசிறி விட்டார்கள்.. தீ ,மலமலவென எரியும் போது ஏதோ ஒரு கீறிச்சிடும் ஒலியை நான் கேட்டது போல் உணர்ந்தேன். ஒருசில மணி நேரங்களில் அந்த குவியல் சாம்பலாக ஆனது..
இந்த கொடூரமான சடங்கை நடத்தியவர்கள், அதை நிறைவேற்றியதில் பெருமிதம் கொண்டிருந்த மாதிரியும்.. ஒருஉயிரோடு உள்ள பெண்ணை உயிரோடு எரித்ததால் எந்த பாதிப்பில்லை என்பது மாதிரியும் திரும்பிச் சென்றார்கள்..
இதில் ஒருகசப்பான உண்மை என்னவென்றால் சில பெண்கள் உடன்கட்டை ஏற்றுவதில் தகராறு செய்வார்கள்.. அப்படிப்பட்ட பெண்களை கட்டாயப்படுத்தி சடங்குகள் செய்து கை கால்களை கட்டி எரியும் நெருப்பில் அந்த பெண்களைத்தூக்கி போடுவார்களாம்..
இது அந்த ஐரோப்பியருக்கு செவி வழியில் கிடைத்த செய்தி..
இந்த உடன்கட்டை ஏற்றும் நடைமுறையை தடுக்க கடுமையாக போராடியவர்தான் “இராஜாராம் மோகன் ராய்.. “.
இவரின் கடுமையான போராட்டங்களின் வெற்றியாகத்தான்
1829, ஆண்டு ( டிசம்பர் 4) இதே நாளில்.. கவர்னர் ஜெனரல்,லார்ட் வில்லியம் பென்டிங்.. “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தார்கள்.. கணவர் இறந்தால் பெண்கள் உடன்கட்டை ஏற்றும் பழக்கத்தை நிறுத்தினார்கள்..
இந்த சட்டத்திற்கு “வில்லியம் கேரி” என்பவரின் பங்கும் இருந்தது..
பல வரலாற்று நிகழ்வுகளை நாம் என்றென்றும் மறக்கக்கூடாது..
இந்த உடன்கட்டை ஏற்றுதல் பழக்கத்தால் எத்தனை பெண்களின் கனவுகள், ஆசைகள், இலட்சியங்கள், எல்லாம் உயிருடன் எரிக்கப்பட்டு இருக்கும்..
இறைவா.. நம் முன்னோர்களும் சில நேரங்களில் முட்டாளாக வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று..

There are no reviews yet.
Reviews
There are no reviews yet.